Friday, November 04, 2011
ஹவானா: கடந்த 1959ம் ஆண்டு கியூபாவில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை கைப்பற்றினார் பிடல் காஸ்ட்ரோ. அதன்பின் தொடர்ந்து கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் சட்டப்பூர்வமான அரசியல் கட்சியாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும். அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக் குறைவால் பதவி விலகினார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பொறுப்பேற்றார்.
இவர் பொறுப்பேற்ற பின்னர், கியூபாவின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், விதிகளை தளர்த்தவும் முடிவு செய்துள்ளார். அதன்படி, கியூபா மக்கள் சொந்தமாக வீடு உள்பட அசையா சொத்து வாங்கவும், விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 10ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. எனினும், ஒவ்வொருவரும் எவ்வளவு சொத்துக்கள் வைத்துக் கொள்ளலாம் என்று வரையறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையான கிரான்மாவில், கியூபா மக்கள் சொத்துக்கள் வாங்கலாம், விற்கலாம், வாரிசுகளுக்கு கொடுக்கலாம், அன்பளிப்பு வழங்கலாம். அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபாவில் மக்கள் கார்கள் வாங்கவும் விற்கவும் சமீபத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment