Thursday, November 24, 2011அமெரிக்க, பிரித்தானிய பொருளாதாரங்களை விடவும் இலங்கைப் பொருளாதாரம் மிகவும் வலுவானது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
உலகின் பலம் பொருந்திய நாடுகளை விடவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2011ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.3 வீதம் என தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தில் பாரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்களினால் நாட்டின் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் n;சயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதியிறக்கம் நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment