Friday, November 18, 2011முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டடத் தொகுதியை அண்மித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போது கற்கள் வீசப்பட்டதாக எமது செய்திளார் குறிப்பிடுகிறார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு சற்று நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
சரத் பொன்சேக்காவுக்கு மூன்று வருட சிறை - ஐந்தாயிரம் ரூபா அபராதம்!
இந்த வழக்கில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட சரத் பொன்சேக்காவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
தீபாலி விஜேசுந்தர, டபிள்யூ எம்.ரி.பி.வாராவெவ மற்றும், ஏ.இசெட் ரசீன் ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குமாழ் முன்னிலையில் சுமார் ஒரு வருடகாலமாக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
முன்னாள் இராணுவத் தளபதி சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்ததாக கூறப்படும் கருத்தொன்றை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
சரத் பொன்சேக்காவுக்கு இன்று மூன்று வருட சிறைத்தண்டனையும் ஐந்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு:- சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால கடூழிய சிறைத் தண்டனை!
இந்த அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவர் மேலும் ஆறு மாத சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் முதலாவது குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டதால் இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது. மூன்றாண்டு கடூழிய சிறைத்தண்டனையுடன் 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த செவ்வி தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் முதலாம் குற்றச்சாட்டு மட்டுமே நிரூபணமாகியுள்ளது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் பொன்சேகா குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதவான்களான தீபாலி விஜேசுந்தர, எம்.எஸ்.ராசீன் மற்றும் டபிள்யூ.ரீ.எம்.பீ.பி. வீரவில ஆகிய நீதவான்கள் இந்த வழக்கை விசாரணை செய்து வந்தனர்.
தீபாலி விஜேசுந்தர மற்றும் ராசீன் ஆகிய நீதவான்கள் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளதுடன், சரத் பொன்சேகா மீதான மூன்று குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றமவர் என நீதவான் வீரவில தீர்மானித்துள்ளார்.
1. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா சான்ட்ரா ஜேன்ஸிடம் பிழையான தகவல்களை வழங்கியமை
2. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன உணர்வுகளை தூண்டியமை
3. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியமை
ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, தாம் அரசியலில் ஈடுபடுவதனை விரும்பாத சக்திகள் இவ்வாறு தமக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தம்மை சிறைச்சாலையில் வைத்துக் கொண்டு அரசியல் நடத்த சிலர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தன் பின்னர் சரத் பொன்சேகா நீதிமன்றின் வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது பதற்ற நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறைந்தபட்சம் இரண்டு காவல்துறை வாகனங்கள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment