Friday, November 18, 2011

களுத்தறை தீனியாவல பகுதியில் மாமனாரை கொலை செய்தவர் தானும் தற்கொலை!

Friday, November 18, 2011
களுத்தறை தீனியாவல பகுதியில் தமது மாமனாரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

நேற்று பிற்பகல் தமது மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ள குறித்த நபர் மாமனாரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

பின்னர் மனைவியின் சகோதாரன் மீதும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன்போது கடுங்காயங்களுக்கு உள்ளான மனைவியின் சகோதரன் களுத்தறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனைகள் களுத்தறை, நாகொட வைத்தியசாலையில் இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment