Friday, November 18, 2011

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள் தான் என புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக-எரிக் சொல்ஹெய்ம்!

Friday, November 18, 2011
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள் தான் என புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாக-சொல்ஹெய்ம்!

கோத்தபாய ராஜபக்ஷவை தவிர வேறு எவரும் போரில் வெற்றிப்பெற முடியும் என கூறவில்லை என நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தாக திவயின கூறியுள்ளது.

இந்திய புலனாய்வு சேவை அதிகாரிகள் கூட 2008 ஆம் ஆண்டு வரை புலிகளை தோற்கடிக்க முடியும் என கூறவில்லை.புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அமெரிக்காவும் இருந்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள் தான் என புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்யவில்லை என பிரபாகரனும், பொட்டம்மானும் தன்னிடம் பொய் கூறியதாக அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்தாக திவயின கூறியுள்ளது. ஒஸ்லோவில் நடந்த போர் நிறுத்த உடன்படிக்கை முறிவடைய காரணமாக விடயங்களை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியீட்;டு வைபவத்தில் நோர்வே அமைச்சர் இதனை கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment