Friday, November 25, 2011வெள்ள நிலைமை, காற்று, மண்சரிவு உட்பட எந்தவொரு இயற்கை அனர்த்ததின் போதும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பாதுகாப்புத் தரப்புகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையின் ஏழாவது கூட்டம், அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற போதே ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்த நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை வகுக்குமாறும் இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள தேடுதல் மற்றும் மீட்புக்கான பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment