Tuesday, November 8, 2011

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் சற்று நேரத்துக்கு முன்னர் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது!

Tuesday, November 08, 2011
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் சற்று நேரத்துக்கு முன்னர் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

தேரர்கள் உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடையத் தவறிய நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கான சட்டமூலத்தை தயாரிக்கும் நடவடிக்கையின் போது அரசாங்கம் செயற்பட்ட விதத்தை ஆட்சேபித்து தீனியாவல பாலித்த தேரர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நகர்த்தல் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த அடிப்படை உரிமை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்ககொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புடன் தேரர்கள் சிலருடன் எதிர்கட்சிப் பிரதிநிதிகளும் உயர் நிதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர்களில் சிலருக்கு மாத்திரம் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை வழங்க முடியும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கு தேரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்போது இந்த நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment