Tuesday, November 08, 2011கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக் குழுவின் பந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையின் வரைபு செயற்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறுவதாக ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பின்னர் எந்த நேரத்திலும் அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு நல்லிணக்க ஆணைக்குழு தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையானது சுமார் 400 பக்கங்களை கொண்டிருக்கும் என்றும் அதனுடன் மேலதிக இணைப்புக்களும் காணப்படும் எனவும் லக்ஷ்மன் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
மேலும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக் காலம் நிறைவடைகின்றது. 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நல்லிணக்க ஆணைக்குழு கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆணை க்குழுவின் அலுவலகம் சில காலங்களுக்கு இயங்கும். காரணம் ஒருசில அதிகாரிகள் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நிரந்தர ஆவணப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவானது கொழும்பு உட்பட நாட்டின் அதிகமான மாவட்டங்களில் விசாரணை அமர்வுகளை நடத்தியது. வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பிரதேங்களிலும் அமர்வுகளை நடத்தியது. மேலும் அரசாங்கத்துக்கு ஏற்கனவே இடைக்கால அறிக்கை ஒன்றையும் ஆணைக்குழு சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment