Thursday, November 10, 2011

சென்னை தி.நகர் முழுவதும் வியாபாரிகள் சங்கம் இன்று கடையடைப்பு போராட்டம்!

Thursday, November 10, 2011
சென்னை, - சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க கோரி, சென்னை தி.நகர் முழுவதும் வியாபாரிகள் சங்கம் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டியிருப்பதாக கூறி, 25 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த மாதம் 31ம் தேதி சீல் வைத்தனர். மேலும், சீல் வைக்கப்பட்ட கட்டிடங்களில் உள்ள கடைகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இதனால், 100க்கும் அதிகமான கடைகள் செயல்பட முடியாமல் 10 நாட்களாக முடங்கி கிடக்கின்றன.


சீல் வைத்த கடைகளை திறக்க வேண்டும் என்று, தி.நகர் வியாபாரிகள் சார்பில், தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க கோரி தி.நகர் முழுவதும் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று, தி.நகர் ரங்கநாதன் தெரு, பனகல் பார்க் - உஸ்மான் ரோடு, பாண்டிபஜார், அன்னை சத்யா பஜார் வியாபாரிகள் சங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

அதன்படி, தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் இன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அப்பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. துணிகள், நகைகள் வாங்குவதற்காக தி.நகர் பகுதிக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment