மாலத்தீவில் சார்க் மாநாடு : மன்மோகன் - கிலானி பேச்சு!
அட்டு: மாலத்தீவில் உள்ள அட்டு நகரில் தெற்காசிய நாடுகளின் (சார்க்) 17வது மாநாடு நடக்கிறது. இதில் இந்தியா, பூடான், வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் அட்டு அடோல் பகுதியில் ஷாங்கிரில்லாவில் உள்ள கடற்கரையோர ரெஸ்டாரன்டில், பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியும் இன்று காலை சந்தித்து பேசினர்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மதாய் கூறுகையில், ÔÔபாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் எதேச்சையாக சென்ற இந்திய ராணுவ ஹெலிகாப்டரையும், அதில் இருந்த வீரர்களையும் பாகிஸ்தான் உடனடியாக விடுவித்தது. அதேபோல் இந்தியா நட்பு நாடு என்ற அந்தஸ்தை வழங்கி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைளால் இருநாட்டு உறவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த சந்திப்புக்கு பின் நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியது மனப்பூர்வமாக இருந்தது. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இருநாட்டு உறவில் இந்த சந்திப்பு ஒரு மாற்றத்தை கொண்டு வரும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தற்காலிக உறுப்பினர் பதவி வகிக்க இந்தியா ஆதரவு அளித்தது. அதற்காக மன்மோகனுக்கு நன்றி தெரிவித்தேன் என்றார். மன்மோகன் கூறுகையில், ÔÔஅமைதிக்காக பாடுபடுபவர் பிரதமர் கிலானி. இதை நான் பல முறை கூறியிருக்கிறேன்.
அடுத்த முறை இருநாட்டுக்கு இடையில் நடக்கும் பேச்சில் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படும். ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை ஒதுக்கி வைத்து ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்துக்கு இருநாடுகளும் முன்வர வேண்டும் என்றார். மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் மன்மோகன் சிங் சந்தித்து பேச உள்ளார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ்சங்கர் மேனன் உள்பட உயரதிகாரிகளும் மாலத்தீவு வந்துள்ளனர்.
Thursday, November 10, 2011
சார்க் நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா பாடுபடும்: பிரதமர் மன்மோகன் சிங்!
Subscribe to:
Post Comments (Atom)







Thursday, November 10, 2011
No comments:
Post a Comment