Friday, November 11, 2011

ரணில் பிரித்தானியாவில்!

Friday, November 11, 2011
சர்வதேச ஜனநாயக வாதிகள் சங்கத்தின் வருடாந்த மாநாடு இன்று பிரித்தானியா – லண்டன் நகரில் ஆரம்பமானது.

இதில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தலைமையில் 3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் ஜனநாயகத்தை பாதுகாப்பது தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த சங்கத்தின் பிரதித் தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நாளைய தினம் விசேட உரை ஒன்றையும் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment