Friday, November 11, 2011சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் 400 சிறுவர்கள் அமைதிப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.
இந்த அமைதிப்பேரணி மன்னார் நகரில் நேற்று முற்பகல் இடம் பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
சிறுவர்களை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதற்கும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்தைக் கண்டித்தும் இந்த மௌன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மன்னார் பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்நடத்தை பிரிவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பேரணியை தொடர்ந்து மன்னார் நகரில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்கும் தொலைப்பேசி இலக்கம் காட்சிப்படுத்தப்பட்ட பலகையொன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பலகையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திறந்து வைத்துள்ளார்.
No comments:
Post a Comment