Monday, November 21, 2011ஜோர்தானிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை இளைஞனின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எல்பிட்டிய நவந்தகல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள இளைஞன் தனது மனைவியுடன் ஜோர்தானிலுள்ள
ஆடைத்தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்துள்ளதாக அவரது உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும் குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் வினவியபோது இளைஞனின் மரணம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுமுகாமையாளர் ஹரிச்சந்திர பட்டுகொட கூறினார்.
No comments:
Post a Comment