Wednesday, November 23, 2011நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், மக்களின் நல்வாழ்வை யும் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இலங்கையை பொருளாதார ரீதியிலும், மற்றெல்லாத் துறைகளிலும் வளம்மிக்க நாடாக உருவாக் குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் சம ர்ப்பித்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஒரு வலுவான அடித்தள மாக அமைந்துள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமாக நன்மையடைபவர்கள் சாதாரண பொதுமக்களும் நாட்டுக்காக தங்கள் உழைப்பை பெற்றுக் கொடுக்கும் அரசாங்க ஊழியர்களுமாகும்.
இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக் கொடு க்கும் உல்லாசப் பிரயாணத்துறையை வளப்படுத்தி, அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் பெற்றுக் கொடுப்பதற்கும், ஜனாதிபதி அவர்கள் உல்லாசப் பிரயாணத்துறைக்கு வரிச் சலுகைகளை யும் ஏனைய உற்சாகமூட்டும் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியி ருப்பது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.
பொதுவாக வரவு செலவுத் திட்டத்தை நாட்டின் நிதியமைச்சர் சமர்ப்பிக்கும் போது அன்று பாராளுமன்றத்தில் கதாநாயகனாக அவர் விளங்குவார். பாரா ளுமன்றத்தில் அவர் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போது எதி ர்க்கட்சி அங்கத்தவர்கள் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து, அவரது வரிவிதிப்பு முறைகளை எதிர்க்கட்சியினர் எதிர்த்தாலும் கூட அவரது உரைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் கெளரவமான முறையில் நடந்து கொள்வார்கள்.
ஒரு வரிவிதிப்பை பாராட்டி அரசாங்கக் கட்சியினர் கரகோஷம் செய்யும் போது எதிர்க்கட்சியினர் கரகோஷம் செய்யாமல் இருந்தாலும் அமைதி யாக இருப்பார்கள். இதுவே வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற சம்பிரதாய மாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண் டிருந்த போது, எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை துச்ச மாக எறிந்துவிட்டு மிகவும் வேதனைக்குரிய முறையில் நடந்து கொண் டமை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மாறான ஒரு செயல் என்று நாம் கண்டிக்க விரும்புகின்றோம்.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரைகள் கடந்த காலத்தில் ஜனாதி பதி ஆர்.பிரேமதாஸவின் பதவிக்காலத்திலும் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் காலத்திலும் நடைபெற்ற சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கூப்பாடு போட்டு அமைதியை சீர்குலைத்த சம்பவங்கள் பல இடம்பெற்றன. இதனால் அன்றைய ஜனாதிபதிகள் பதற்றமடைந்து செய்வதறியாது வேதனையுடன் பாராளுமன்றத்தின் அமர்வில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்தத் தடவை ஜனாதிபதி அவர்கள் மக்களுக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போதும், இவ்வி தம் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும், பாராளுமன்ற சுதந்திரத்திற்கும் தீங்கிழைக்கக்கூடிய வகையில் சில எதிர்கட்சியினர் செயற்பட்டனர்.
ஜனாதிபதி அவர்கள் 1970ம் ஆண்டில் 24 வயது இளைஞராக பாராளுமன்றத் திற்கு பிரவேசித்து, தன்னுடைய திறமையினால் படிப்படியாக அமைச்சராக வும், எதிர்க்கட்சித் தலைவராகவும், பிரதம மந்திரியாகவும், ஜனாதிபதியாக வும் பல்வேறு பதவிகளை வகித்த அனுபவத், முதிர்ச்சிமிக்க அரசியல் வாதி என்பதை திங்களன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட உரையின் போது நடந்து கொண்டது உண்மையிலேயே நாட்டு மக்களாகிய அனை வரும் மகிழ்ச்சி பரவசமடைய வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு ஆர்பாட்டங் களை செய்து அந்த ஜனாதிபதிகளை பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் குறுக்கீடுகள் செய்து கொண்டே இருப்பார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவ்விதம் பதற்றமடையும் நிலை யில் நடந்து கொள்ளவில்லை. தனக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பவர்க ளைப் பார்த்து கோபப்படவும் இல்லை. சிரித்துக் கொண்டே எதிர்க்கட்சியி னருக்கு அவ்வப்போது சில கிண்டல்களை செய்து கொண்டு, தனது வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
ஜனாதிபதி அவர்களை தடுமாற்றமடையச் செய்து, ஆத்திரமடையச் செய்வத ற்கு எதிர்க்கட்சியினர் எடுத்த முயற்சிகள் குறித்து ஆத்திரமோ, கோபமோ அடையாமல், ஜனாதிபதி அவர்கள் மிகவும் அமைதியான முறையில் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்ததனால் தங்கள் முயற்சி வெற்றிபெறாது என்பதை உணர்ந்து கொண்டு எதிர்க்கட்சியை சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அமைதியாகி ஒவ்வொருவராக சபையை விட்டு வெளியேறினார்கள்.
பொதுவாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஒருவர் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய பின்னர், அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனை வருக்கும் ஒரு தேனீர் விருந்தை அளிப்பார். அந்த தேனீர் விருந்தின் போது, ஜனாதிபதி, பிரதம மந்திரி, சிரேஷ்ட அமைச்சர்கள், நிதி அமைச் சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட, எதிர்க்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து அரசியல் பேதங் களை மறந்து நண்பர்களாக அன்புடன் பரஸ்பரம் உறவாடியவாறு தேனீர் விருந்தில் கலந்து கொள்வார்கள்.
இது ஒரு பாராளுமன்ற சம்பிரதாயமாகும். இந்த பாராளுமன்ற சம்பிரதாயத்தை ஐக்கிய தேசிய கட்சி குழி தோண்டி புதைத்துவிட்டமை குறித்து நாம் வேத னைப்படுகின்றோம். இந்தத் தடவை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரோ இந்த தேனீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.
பாராளுமன்ற சுதந்திரத்தைப் பற்றி பேசும் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் ஆசிய பிராந்திய தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச அரங்கில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தைப் பற்றி ஒரு ஜனநாயக வாதியைப் போன்று பேசினாலும் எங்கள் நாட்டின் பாராளுமன்றத்தில் ஜன நாயக சுதந்திரத்திற்கு மாறான முறையில் நடந்து கொள்வது உண்மையி லேயே பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர் களை வேதனையில் ஆழ்த்தும் என்பது திண்ணம்.
No comments:
Post a Comment