Wednesday, November 23, 2011 ஊட்டி:பத்திரிகையாளர்களை, அவதூறாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா இயக்குனர் சேரன் ஆகியோர், ஊட்டி குற்றவியல் நீதிமன்றத்தில், டிச., 12ம் தேதி, நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு நடந்த, நடிகர்கள் சங்கக் கூட்டத்தில், "தினமலர்' இதழுக்கு எதிராகவும், பத்திரிகையாளர்களின் சமூக தகுதியை குறைக்கும் வகையிலும், பத்திரிகையாளர்கள் குடும்பத்தாரை கேவலப்படுத்தும் வகையிலும், பத்திரிகை ஆர்வலர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக, ஊட்டியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரொசாரியோ, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சமூக ஆர்வலர்கள் வீரமதிவாணன் மற்றும் தவ முதல்வன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், "இவ்வழக்கின் எதிரிகள் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், விவேக், அருண் விஜய், விஜயகுமார், நடிகை ஸ்ரீ பிரியா, இயக்குனர் சேரன் ஆகியோர், டிச., 19ம் தேதி, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என சம்மன் அனுப்ப, குற்றவியல் நடுவர் சுப்ரமணியம் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் ரொசாரியோ தரப்பில் வழக்கறிஞர்கள் விஜயன் மற்றும் செந்தில்குமார் ஆஜராகினர்.
No comments:
Post a Comment