Wednesday, November 23, 2011ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மாலைதீவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிய பிராந்திய நாடுகளுக்கான விஜயத்தின் ஓர் பகுதியாக நவனீதம்பிள்ளை மாலைதீவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
நவனீதம்பிள்ளையின் மாலைதீவு விஜயம் மூன்று நாட்கள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நீசாட் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆசிய பிராந்திய வலய நாடுகளில் மனித உரிமை அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் என்ற தலைப்பில் விசேட சொற்பொழிவு ஒன்றை நவனீதம்பிள்ளை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மனித உரிமை விவகாரங்களில் நவனீதம்பிள்ளைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடான நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவிற்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment