Tuesday, November 22, 20112012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட பிரேரணை கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில், முன்வைக்கப்பட்டன.
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசித்து வெகு விரைவில் கருத்துக்களை வெளியிடவுள்ளதாக மேல்மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் மஞ்சுசிரி அரங்கல தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண சபையின் 2012 அம் ஆண்டிற்கான வரவு செலவு திட்;டம் இன்று மத்திய மாகாண சபையில் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக சமர்ப்பித்தார்.
இந்த நிலையில் இந்த பிரேரணை தொடர்பான வாத விவாதங்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் 29 வரையில் இடம்பெற்று அன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இதனிடையே, நேற்றைய தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் வரவு செலவு திட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட போது அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஷாந்தினி கோங்ஹாகே தமது வாயை கருப்பு பட்டியால் கட்டியவாறு சபை கலைந்துச் செல்லும் வரையில் அமர்ந்திருந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனால் சமர்ப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், வரவு செலவுத்திட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்புத் தெரிவித்து, வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் தயாகமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊவா மாகாண சபைக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை மாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்சவினால் முன் வைக்கப்பட்டது.
எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் போது மாகாண அபிவிருத்திகளுக்காக பல்வேறுபட்ட யோசனைகள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிர்வாகத்தில் இயங்கும் போப்பே பொத்தள பிரதேச சபைக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
No comments:
Post a Comment