Tuesday, November 22, 2011பெங்களூர் : சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான ஜெயலலிதா இன்று ஒரே நாளில் நீதிபதி கேட்ட 578 கேள்விகளுக்கு பதிலளித்தார். எஞ்சியுள்ள 194 கேள்விகளை நாளை கேட்க திட்டமிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு தொடர்பாக மொத்தம் ஜெயலலிதாவிடம் 1339 கேள்விகள் கேட்கபட நீதிபதிகள் திட்டமிட்டிருந்தனர். இதுவரை நடைப்பெற்ற 3 நாள் விசாரணையில் மொத்தம் 1147 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதிலளித்தார். மீதமுள்ள கேள்விகள் நாளை நடைபெறும் இரண்டாவது நாள் விசாரணையில் கேட்கப்படவுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெரும்பாலனவைக்கு ஞாபகம் இல்லை என்று பதிலளித்துள்ளார். 90% கேள்விக்கு தனக்கு தெரியவில்லை என்றே ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
முன்னதாக, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 1384 கேள்விகள். எனவே இன்னும் 817 கேள்விகள் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டியிருப்பதால், அடுத்த விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா ஒத்தி வைத்திருந்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க விலக்குகோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது,
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.குமார், ஜெயலலிதா நேரில் ஆஜராக அவகாசம் கொடுக்கும்படி மனு செய்தார். அதை ஏற்று கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று ஆஜரானார். இதன் பிறகு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகாஜூனரய்யா விசாரணையை தொடங்கினார். ஜெயலலிதாவுடன் ஓ. பன்னீர் செல்வம் உட்பட 6 அமைச்சர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1500 போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடையாள அட்டை இல்லாத வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான ஜெயலலிதா இன்று ஒரே நாளில் நீதிபதி கேட்ட 578 கேள்விகளுக்கு பதிலளித்தார். எஞ்சியுள்ள 194 கேள்விகளை நாளை கேட்க திட்டமிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் பெரும்பாலனவைக்கு ஞாபகம் இல்லை என்று பதிலளித்துள்ளார். 90% கேள்விக்கு தனக்கு தெரியவில்லை என்றே ஜெயலலிதா பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment