Wednesday, November 23, 2011

பயங்கரவாதிகள் மனித உரிமைகளை மறைந்திருந்து தாக்க ஆரம்பித்துள்ளனர் - ஜனாதிபதி!

Wednesday, November 23, 2011
கடந்த காலத்தில் பொது மக்களை மறைந்திருந்து தாக்கிய பயங்கரவாதிகள் தற்போது மனித உரிமைகளை மறைந்திருந்து தாக்குவதற்கு ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றனர்.

பயங்கரவாதத்தினைத் தோற்கடித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், தேசிய பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்காக சவால்களை முடிவுக்கு கொண்டுவர முடியாதுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகள் அன்று பெற்றுக்கொண்ட வருமானத்தை ஆயுதங்கள், கப்பல்கள், விமானங்கள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியதாகவும், தற்போது சர்வதேசத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் பணத்தை தாய்நாட்டிற்கு எதிரான பிரசார நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சதிகளுக்கு பயன்படுத்துவதகாவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பிடத்தின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வகைகளிலும் ஏற்படும் குற்றச்சாட்டுக்கள் தேசிய பாதுகப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment