Friday, November 25, 2011வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையுமில்லை. அங்கு இராணுவ ஆட்சி நடக்குமா னால், த. தே. கூட்டமைப்புக்கு தேர்தலில் போட்டியிடவோ வெற்றி பெறவோ முடிந்திருக்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட மூன்றாம் நாள் விவாதத்தின் போது த. தே. கூட்டமைப்பு எம். பி. தெரிவித்த சில குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:-
ரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. சபையில் பல கருத்துக்களை கூறினார். கொக்குசான்குளத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ஐ. தே. க. ஆட்சியிலே இங்கு குடியேற்றம் நடைபெற்றது. எமது அரசாங்கம் இங்கு குடியேற்றம் மேற் கொள்ளவில்லை.
ஏற்கனவே குடியேற்றிய மக்களை இப்பொழுது வெளியேற்ற முடியாது. வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக த. தே. கூட்டமைப்பு குற்றஞ்சாட்டினாலும் இராணுவமே அங்கு பல சேவைகளை செய்து வருகிறது. சுரேஷ் எம். பி. யின் குற்றச் சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன்.
No comments:
Post a Comment