Sunday, November 20, 2011அரசியல் தீர்வு குறித்த அரசாங்கத்துடனான தமது பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்கிறது-தமிழ் தேசிய கூட்டமைப்பு!
அரசியல் தீர்வு குறித்த, அரசாங்கத்துடனான தமது பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்டார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும், இழுப்பறியில் செல்வதால், பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கையினை (TNA)மக்கள் இழந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் விரும்பினால், எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் மேலதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment