Thursday, November 10, 2011களனி பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
விஞ்ஞானப் பீட மாணவர்களுக்கு இடையில் இன்று காலை மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்தவர்கள் கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடத்தின் மாணவர் மன்றத்திற்காக போட்டியிட்ட இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment