Thursday, November 10, 2011

புத்தளம் நகைக்கடை கொள்ளை : மூன்று சந்தேகநபர்கள் கைது!

Thursday, November 10, 2011
புத்தளம் பகுதி நகைக்கடை ஒன்றில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புத்தளம் நகரிலுள்ள நகைக்கடை ஒன்றினுள் நேற்று மாலை நுழைந்துள்ள சிலர் நகைகள் கொள்வனவு செய்பவர்களைப் போன்று பிரவேசித்துள்ளனர்.

அதன் பிரகாரம் தங்காபரணங்களை பார்வையிடுவதற்கு உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் வருகை தந்த காரும் தங்காபரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment