Wednesday, November 02, 2011
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தம் தொடர்ந்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்ட்டிருக்கும். அதேபோல் பல கோடான கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும்.
அதை தடுத்து நிறுத்தி ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச மக்களின் தேவைகளை கண்டறியும் விசேட செயலமர்வு ஆரையம்பதி பிரதேசசபை தலைவர் திருமதி.மேரி கிருஷ்டினா தலைமையில் நடைபெற்றபோது, அந்நிகழ்வில் முதலமைச்சர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment