Wednesday, November 02, 2011
எமது நாட்டிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நாட்டை அழித்தொ ழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. எனவே அனைவரும் பேதங்களை மறந்து நாட்டையும், நாட்டுத் தலைவரையும் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநுராதபுரம் திருகோணமலை வீதி புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அன்று எமது நாட்டு மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருந்தது. வாகனமொன்றில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகச் செல்ல முடியாது. மாணவர்களுக்கு பாடசாலைக்குச் செல்ல முடியாது. எங்கும் அச்சமான சூழ்நிலை, நிச்சயமற்றதொரு உயிர் வாழ்க்கை, இவ்வாறான நிலைமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இல்லாதொழித்து மக்கள் நிம்மதியாக வாழும் அமைதிச் சூழலை உருவாக்கியுள்ளார்.
பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப் பட்ட நாட்டை கட்டியெழுப்பும் பணியில், ஜனாதிபதி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.
மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதில் அடிப்படை வசதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவேதான் நகரம், கிராமம் என்ற பேதமின்றி அடிப் படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகின் றன. நாட்டு மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றõர்.
அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டே அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.எனவே முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment