Tuesday, November 8, 2011

இணையத்தள தடை குறித்து சாக் மாநாட்டில் யோசனை!

Tuesday, November 08, 2011
சாக் மாநாட்டை முன்னிட்டு இடம்பெறும் வெளிவிவகார துறை அமைச்சின் செயலாளர் மாநாடு இன்று இடமபெறவுள்ளது.

17 வது சாக் மாநாடு இந்த முறை மாலைதீவின் அட்டு நகரில் இடம்பெறவுள்ளது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இன்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம கலந்து கொள்ளவுள்ளநிலையில், அவர் நேற்று இலங்கையிலிருந்து பயணமானார்.

இதனிடையே, நாளையதினம் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், எதிர்வரும் 10 ம் , 11 ம் திகதிகளில் இடம்பெறவுள்ள சாக் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளையதினம் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரசின் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவிக்கும், மற்றும் போலி பிரசாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களை சாக் வலயத்தில் இருந்து அகற்றுவது தொடர்பான யோசனையொன்றும் இலங்கையினால் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் செயற்பாடுகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் செய்திகளை வெளியி;ட்டு வந்ததாக கூறப்படும் 5 செய்தி இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.

பிரிவினைகளை தூண்டும்வகையிலும், ஒருவரின் சுயகௌரவத்தை பாதிக்கும் வகையிலும் குறித்த இணையத்தளங்கள் செய்திகளையும், ஆக்கங்களையும் வெளியிட்டு வந்ததாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சு செயலாளர் டப்ளியு..பி.கனேகல தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் பிழையான நிலைப்பாடுகள் பரவுவதை தடுக்கவே இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான இணையத்தளங்கள் குறித்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்த நிலையில், அவற்றின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன.

அதன்பின்னரே அவற்றின் செய்திகளின் தன்மைகளை கவனத்தில் கொண்டு தடைசெய்யப்பட்டதாக டப்ளியு.பி.கனேகல குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment