Tuesday, November 08, 2011
திருச்சி:சென்னையில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 5 நிமிடம் முன்னதாகவே மதியம் 2 மணிக்கு திருச்சி விமான நிலைய ஓடு தளத்தில் இறங்கிக் கொண்டிருந்தது.
அதே நேரத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றது. அப்போது 2 விமானங்களும் ஒரே நேரத்தில் ஓடு தள பாதையில் மோதுவது போல் அருகருகே சென்றன.
இதனை விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக பார்த்து 2 விமானிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். விமானிகள் சமயோசிதமாக செயல்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் 2 விமானங்களும் ஒன்றுடன் ஒன்று உரசாமல் சென்றன.
இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 170 பயணிகளும், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30 பயணிகள் என மொத்தம் 200 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

No comments:
Post a Comment