Tuesday, November 08, 2011
தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்கள் காரணமாக பேதைப் பொருள் கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான திட்டம் ஒன்றினை செயற்படுத்தியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் போதைப் பொருள் சுற்றிவளைப்புக்களுக்கான விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பலர் கைதுசெய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வான் மற்றும் கடல் மார்க்கமாக இலங்கைக்குள் பேதைப் பொருள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான திட்டம் ஒன்றையும் செயற்படுத்தி உள்ளதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment