Wednesday, November 16, 2011

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை!

Wednesday, November 16, 2011
பீஜிங்: சீனாவுடனான இந்திய எல்லையில் 1 லட்சம் படை வீரர்களை நிறுத்தும் இந்தியாவின் முடிவு இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் செயல் என சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் சீனாவுடனான எல்லையில் சாலை மேம்பாடு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எல்லையில் 1 லட்சம் வீரர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு இரு நாடுகளிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் செயல் என சீனா தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டி.ஆர்.டி.ஓ., தலைவர் சரஸ்வத், பாதுகாப்பு விஷயத்தில் அண்டை நாடுகளை ஒப்பிட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment