Wednesday, November 16, 2011

இலங்கை பெண் மரணம், சவூதி ஒரு மாதத்தில் பதில்!

Wednesday, November 16, 2011
சவுதியில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது மரணமான இலங்கை பெண்ணின் மரண அறிக்கை இன்னும் ஒரு மாதகாலத்திலேயே வழங்கப்படும் என குவைத்துக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த பெண்ணின் மரண விசாரணை அறிக்கையை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு பதில் வழங்கும் முகமாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குவைத் தூதரகம் ஊடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த கலாவ புதிய புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண், கடந்த 31 ஆம் திகதி மரணமானதாக தெரிவிக்கப்பட்டது.

அவரது சடலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டதன் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது, அவரது உடல் அவயவங்கள் சில அகற்றப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதேவேளை, திருட்டுச் சம்பவம் தொடர்பாக குற்றச் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு பஹ்ரெய்ன் குற்றத்தடுப்பு நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியுள்ளது.

குறித்த வீட்டு உரிமையாளரினால் இந்த இலங்கை பணிப்பெண்ணுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நாட்டு காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பணிப்பெண் வீட்டு உரிமையாளரின் உடைகளையும் உணவு வகைகளையும் திருடியதாக அவர் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணையின் போது வீட்டு உடமைகள் தனக்கு உரிமையாளரினால் குறித்த பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த சாட்சியங்களை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் இலங்கை பணிப்பெண்னை குறித்த வழங்கில் இருந்து விடுதலை செய்தது.

No comments:

Post a Comment