Wednesday, November 16, 2011

மாங்குளம் பொலிஸார் நேற்று நடத்திய தேடுதலின் போது பெருந்தொகையான வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்!

Wednesday, November 16, 2011
மாங்குளம்பொலிஸார் நேற்று நடத்திய தேடுதலின் போது பெருந்தொகையான வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். 60 மி.மீ கொண்ட மோட்டார் குண்டுகள் 13, 40 மி.மீ கொண்ட கிரனைட் லோன்சர் ரவைகள் 03, எஸ்.எம்.ஜி ரக கைக்குண்டுகள் 02, ஜொனி ரக குண்டுகள் 02, கைக்குண்டு 01, அருள் ரக கைக்குண்டு 01 ஆகியன மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட இந்த வெடியொருட்களும் ஆயுதங்களும் மாங்குளம் இராணுவ முகாமில் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை, முல்லைத்தீவு உடையார் கட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது 81 மி.மீ மோட்டார் குண்டுகள் ஒரு தொகையுடன் மி.மீ. 60 மோட்டார் குண்டு உட்பட பெருந்தொகையான வேறு ரகங்களைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த குண்டுகளும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.

No comments:

Post a Comment