Wednesday, November 16, 2011

இரண்டாவது சிறுவர் நீதவான் நிதிமன்றம் நாளை யாழ்பாணத்தில்!

Wednesday, November 16, 2011
நாட்டில் இரண்டாவது சிறுவர் நீதவான் நிதிமன்றம் நாளை யாழ்பாணத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது.

இதற்கு யுனிசெப் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீதிமன்றம் நீதியமைச்சர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரால் திற்நதுவைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகின்றன.

சிறுவர் நீதவான் நீதிமன்றம் பத்தரமுல்லையில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் தற்போது அதிகமாக இருப்பதாகவும், அவற்றை துரிதமாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் நோக்கிலேயே இந்த சிறுவர் நீதிமன்றம் திறந்துவைக்கப்படுவதாகவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment