Wednesday, November 16, 2011

யாழ் மாவட்டத்தில் வாக்காளர் பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் 30 ஆம் திகதிவரை!

Wednesday, November 16, 2011
யாழ் மாவட்டத்தில் வாக்காளர் பதிவுகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 30 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பில் வயது வந்தவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

வாக்காளர்களின் பிரச்சினைகள் வாக்காளர் இடாப்பில் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் தேர்தல் திணைக்கள பிரதி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட தேர்தல் ஆணையாளர், வவுனியா மாவட்ட தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை கிராம அலுவலகர்கள், பிரதேசசபை மற்றும் தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி மாட்ட தேர்தல் ஆணையாளர் எஸ்.கருணாநிதி குறிப்பிட்டார்.

அத்துடன் கிராம அலுவலகங்கள் அல்லது தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களை நேரடியாக சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment