Friday, November 18, 2011

இந்தோனேசியாவில் அதிபர் ஒபாமாவுடன், பிரதமர் மன்மோகன் சிங் ஒரு சந்திப்பு!

Friday, November 18, 2011
பாலி: இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் இடத்தில் நடைபெறும் பலவேறு மாநாடுகளில், பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் முதலில் சீன பிரதமர் வென்ஜியா போவை சந்தித்து, இந்தியா- சீனா இடையே உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேசியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் இன்று காலை சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்கள். அணு ஒப்பந்தம், அமெரிக்கா அளித்த கல்வி, பொருளாதார ஒத்துழைப்பு, பேரிடர் மேலாண்மை, கடல் சார் பாதுகாப்பு, தீவிர வாதம் உள்பட பல விஷயங்களை ஒபாமாவும் மன்மோகன்சிங்கும் பகிர்ந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் ஒபாமா கூறியதாவது:-

இந்தியா-அமெரிக்கா இடையே பல விஷயங்களில் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுத்தியுள்ளோம். இரு நாடுகளுக் கிடையிலான பிணைப்பு தலைவர்கள் மட்டத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் நீடிக்கிறது. நாங்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டு மேம்பட முடியும் என்பதற்கு இன்றைய சந்திப்பு மிகவும் சிறப்பான ஒரு வாய்ப்பாக அமைந்தது. இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மேலும் தொடரும், என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment