Saturday, November 26, 2011

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கோரிக்கை விடுத்துள்ளது!

Saturday, November 26, 2011
இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைக்காக குரல் கொடுப்போரை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் கூடுதல் கரிசனை காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு குறித்த தேசிய திட்டம், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, தேசிய மனித உரிமைப் பாதுகாப்பு திட்டம் போன்றன வரவேற்கப்பட வேண்டியவை என அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், சட்டவிரோதமான முறையில் இரகசியமாக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தும நடைமுறை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

துணை இராணுவக் குழுக்கள் மற்றும் அரச படையினரால் சட்டவிரோதமான முறையில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டக்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதகாக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகள் மற்றும் பரிந்துரைகள் பக்கச்சார்பற்ற முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment