Saturday, November 26, 2011

இலங்கையில் 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் 882 பேர் கடத்தப்பட்டுள்ளதாக-இலங்கை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்!

Saturday, November 26, 2011
2009ம் ஆண்டு முதல் இதுவரையில் 882 பேர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

875 கடத்தல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 849 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அநேகமானவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நவம்பர் மாதம் 22ம் திகதி வரையில் 247 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 236 கடத்தல் சம்பவங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment