Saturday, November 26, 2011

சென்னையில் கண்ணாடி இல்லாமல் 3டி படம் பார்க்க புதிய சாப்ட்வேர் அறிமுகம்!

Saturday, November 26, 2011
சென்னை : இந்தியாவில் முதல் முறையாக 3டி படத்தை கண்ணாடி அணியாமல் பார்க்க புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நெர்மிதா டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் மற்றும் ஜீரோ கிரியேட்டிவ் என்ற நெதர்லாந்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த சாப்ட்வேர் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. ஜீரோ கிரியேட்டிவ் தலைவர் ஜான் பியர், நெர்மிதா டெக்னாலஜி சொல்யூசன்ஸ் தலைமை செயல் அதிகாரி சங்கர் வெங்கட்ராமன் ஆகியோர் இதனை அறிமுகப்படுத்தினர்.

பின்னர் சங்கர் வெங்கட்ராமன் பேசுகையில், “இந்தியாவிலே முதல் முறையாக 3டி படத்தை கண்ணாடி அணியாமல் பார்க்க புதிய சாப்ட்வேர், டிவி தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை தியேட்டர்களில் பயன்படுத்தலாம். மேலும் முதல் முறையாக 3டியில் விளம்பர படங்களை தயாரிக்க உள்ளோம். இதனை பார்க்கும்போதும் கண்ணாடி அணிய வேண்டாம். இந்த சாப்ட்வேர் 40 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சென்னையில் இதனை அறிமுகப்படுத்தப்படுவதை அறிந்து பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களை விளம்பரங்களை 3டியில் தயாரிக்க முன்வந்துள்ளன” என்றார்.
விழாவில் நெர்மிதா நிறுவன இயக்குனர் தாமஸ் செபாஸ்டின், சங்கர் வெங்கட்ராமனின் மனைவி ஷிரினோ சங்கர் வர்த்தக மேலாளர் பிரதீப் பார்த்தசாரதி மற்றும் சாப்ட்வேர் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment