Friday, November 18, 2011

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது!

Friday, November 18, 2011
வெள்ளைக்கொடி விவகார வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படவிருக்கின்ற நிலையில் ஹல்ஷ்ரப் நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவிக்கின்றார்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெலஇ சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதற்கு நீதிபதிகள் குழு 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment