Friday, November 18, 2011சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி புலிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது என்று குற்றஞ்சாட்டி உள்ளார்..ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 32 நாடுகள் புலிகளைத் தடை செய்துள்ள போதும், அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது என்றார் பீரிஸ்.
தடை செய்யப்பட்ட புலிகளின் கொடிகளை ஏந்திச் செல்வதைத் தடுப்பதில் அனைத்துலக சமூகம் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற 19 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:-
புலிகள் 2009 மே மாதம் தமது மரபுவழி இராணுவப் பலத்தை இழந்த போதிலும் வெளிநாடுகளில் தொடர்ந்து நிதி சேகரிக்கிறார்கள்.புலிகளுக்குத் தயவு காண்பிப்பதாக எந்தவொரு நாட்டையும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. எனினும் மிக அண்மையில் பேர்த்தில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் போது கூட புலிகளின் கொடியை ஏந்தியபடி போராட்டம் நடத்தினார்கள்.
புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்பட இலங்கை அரசு தயாராக இருக்கிறது. புலம்பெயர் தமிழர்களை ஒதுக்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. போருக்குப் பிந்திய சூழலில் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராவே உள்ளோம். அதேவேளை புலிகளின் தமிழீழம் திட்டத்துக்காகச் செயற்படுவோர் மீது அனைத்துலக சமூகம் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment