Friday, November 18, 2011மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் வைத்து வெளிநாட்டு பெண் ஒருவரை வழிகாட்டிகள் இருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த பெண் மிஹிந்தலை விஹாரைக்கு சென்றிருந்தபோது இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
வழிகாட்டிகள் இருவர் குறித்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு போதை பொருளை வழங்க முயற்சித்ததாகவும் அதற்கு அவர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தம்மை குறித்த இருவரும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக அவர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment