Monday, November 28, 2011

நீர்கொழும்பு பிரதேசத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற நபர் விளக்கமறியலில்!

Monday, November 28, 2011
நீர்கொழும்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கருக்கலைப்பு நிலையத்தில் கருக்கலைப்பு மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்த இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருகலைப்பு மேற்கொள்வதற்காக ஒரு பெண்ணிடம் இருந்து 11 ஆயிரம் ரூபாவும், மற்றைய பெண்ணிடம் 21 ஆயிரம் ருபாவும் அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment