Monday, November 28, 2011கோயம்பேட்டில் நேற்று நடந்த புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் (புலிகளின்) எடுபிடியான திருமாவளவன் குற்றச்சாட்டு:இலங்கை தமிழர் பிரச்னையில் ஜெயலலிதா இரட்டை வேடம்!
சென்னை : இலங்கை தமிழர் பிரச்னையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் (புலி)திருமாவளவன் குற்றம்சாட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்ச்சி, சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது. மாவீரர் தின தீபத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஏற்றி வைத்து, ஈழப் போரில் உயிரிழந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன் என்று ஜெயலலிதா பேசினார். ஆனால், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கோர்ட்டில் கூறுகிறார். 3 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போடுகிறார். ஆனால், நீதிமன்றத்தில் அவர்களை விடுவிக்கக் கூடாது என்று அரசு வக்கீல் கூறுகிறார். மாவீரர் தின கூட்டத்துக்கு அரசு அனுமதி மறுக்கிறது. இலங்கை தமிழர் பிரச்னையில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்.
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்தை தமிழக அரசு வழங்கியது. விபத்து, மழை வெள்ளத்தால் பலியானோருக்கு ரூ.2 லட்சத்தை அரசு வழங்குகிறது. இது என்ன ஓரவஞ்சனை. ஈழத்தமிழர் பிரச்னையிலும் தலித் மக்கள் பிரச்னையிலும் அவருக்கு கவலை இல்லை. அவரது இரட்டை வேடம் வெளிப்பட்டு வருகிறது. ஈழப் போராட்டமும் சாதி ஒழிப்பு போராட்டமும் தொடரும். அதற்கு நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், வன்னிஅரசு, தகடூர் தமிழ்ச்செல்வன், சைதை எஸ்.எஸ்.பாலாஜி, பாவரசு, கவுதமசன்னா, இளஞ்சேகுவேரா, இளஞ்செழியன், சூம் எழில் இமயன், கதிர் ராவணன், து.கா.பகலவன், சைதை ஜேக்கப், செ.மணி, புதியவன், இரா.தமிழ்வளவன், ஆதி.வெற்றிசெல்வன், ரூதர்.கார்த்திக்,பாவலன், சங்க தமிழன், இளையவேந்தன், பெரியசாமி, வளவன், கஜேந்திரன், இளையா, கி.விடுதலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment