Tuesday, November 22, 2011

மஹவ பிரதேசத்தில் போலிக்கச்சேரி நடத்தியவர் கைது

Tuesday, November 22, 2011
மஹவ பிரதேசத்தில் போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையமொன்றை நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குறித்த போலி ஆவணங்களை தயாரிக்கும் நிலையம் இயங்கி வந்ததாதக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பொலிஸார் நேற்றிரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பேபாது போலியான பிறப்பத்தாட்சிப் பத்திரம், பொலிஸ் அறிக்கை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment