Tuesday, November 22, 2011மட்டக்களப்பு உன்னிச்சை பிரதேசத்தில் குகை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை ஆயித்தியமலைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
உன்னிச்சையில் மக்கள் நடமாட்டம் இல்லாத யானைக் காட்டுப்பிரதேசத்திலுள்ள குகையொன்றில் உரப் பைகளினால் பொதியிடப்பட்ட நிலையில் ரி 81 ரக தன்னியக்க துப்பாக்கிகள் 14 ஐ கைப்பற்றியதாக ஆயித்தியமலைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார். ரி 81 ரக தன்னியக்க துப்பாக்கிகளை விமானப்படையினரே உபயோகிப்பதாகவும் அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment