Tuesday, November 22, 2011மனிதவள அபிவிருத்தியில் தெற்காசிய வலயத்தில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டிற்கான மனிதவள அபிவிருத்தி அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
187 உலக நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த அறிக்கைக்கு அமைய இலங்கை மனித வள அபிவிருத்தியில் 97 ஆவது இடத்தை வகிக்கின்றது.
அயல் நாடுகளான இந்தியா 134 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 145 ஆவது இடத்திலும் உள்ளன.
பங்களாதேஷிற்கு 146 ஆவது இடமும், நேபாளத்திற்கு 157 ஆவது இடமும் கிடைத்துள்ளன.
இதனைத் தவிர பூட்டான் 141 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 172 ஆவது இடத்திலும் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி செயற்திட்டம் வெளியிட்டுள்ள 2011 ஆம் ஆண்டிற்கான மனிதவள அபிவிருத்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment