Thursday, November 17, 2011

புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுக்காக புதிய தலைவர்களை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் பொறுப்பு-றொஹான் குணரட்ன!

Thursday, November 17, 2011
புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களுக்காக புதிய தலைவர்களை உருவாக்க வேண்டியது அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் பொறுப்பு என்று சர்வதேச பயங்கரவாத விவகாரம் தொடர்பான நிபுணர் றொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகளில் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அரசாங்கம் அழைத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அழைக்காததன் காரணத்திலேயே, இறுதி நேரத்தில் அந்தக்குழு, தமிழீழ புலிகளின் பிரசார தகவல்களை மாத்திரம் வைத்துக்கொண்டு தமது இறுதி அறிக்கையை தயார்செய்ததாகவும் ரொஹான் குணரத்ன குறிப்பிட்டார்.

இதனிடையே,புலிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் அரச சார்பற்ற ஆலோசனை அமைப்பு ஒன்றையும், புலம்பெயர்ந்தோர் பிரிவு ஒன்றையும் அமைக்கவேண்டும் என்று அவர் யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இலங்கையின் வெளியுறவு அமைச்சு புலிகளின் வெளிநாட்டு பிரசாரங்களை தோற்கடிப்பதில் வெற்றிக்காணவில்லை.

அது இலங்கையை பொறுத்தவரை பாரிய பின்னடைவாகும் எனவும் ரொஹான் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், வடக்கு கிழக்கில், சமாதானத்தை நிலைநாட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும்.

அத்துடன், போருக்கு பின்னர் சமூக பொருளாதார அபிவிருத்தி, அரசியல் தீர்வு, மனிதாபிமான உதவிகள், என்பவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதனிடையே, இலங்கையில் மீண்டும் ஒரு இனமுறுகல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில், மேலும் சமூக நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது அவசியம் என்றும் ரொஹான் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment