Thursday, November 17, 2011

நவம்பர் 20, ஒரு நிமிட மௌன அஞ்சலி!

Thursday, November 17, 2011
இந்த மாதம் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வீதி விபத்துக்களின் பலியானவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை சுகாதார அமைச்சு சகல இலங்கையர்களிடமும் விடுத்துள்ளார்.

நாட்டில் விபத்துக்களின் சிக்குண்டு மரணமானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, முதல் தடவையாக நவம்பர் மாதாம் 20 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு விபத்துக்களில் 15 தொடக்கம் 45 வயதுடையவர்களே அதிகம் பலியாவதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளொன்றிற்கு 6 பேர் வீதம் வீதி விபத்துக்களில் பலியாவதுடன், ஒவ்வொரு 10 வினாடிக்கும் எந்த இடத்திலாவது ஒரு விபத்து இடம்பெறுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment