Thursday, November 17, 2011கொழும்பின் புறநகர் பிரதேசமான கெஸ்பாவ, ஜாலியாகொடவில் அமைந்துள்ள குமார் அணியின் கட்டுப்பாட்டில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அலுவலகத்தை இந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் நிபுனாராய்ச்சி குழுவினர் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சியின் போது ஏற்பட்ட கைகலப்பில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் நிபுனாராய்ச்சியின் தலைமையில் சென்ற சுமார் 70 பேர் கொண்ட குழுவினர் குமார் அணியின் கட்டுப்பாட்டிலுள்ள கெஸ்பாவ மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தைக் கைப்பற்ற முயற்சித்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது
No comments:
Post a Comment