Thursday, November 17, 2011

சுமார் 25 வருட இடைவெளியின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்று தனது சொந்த இடத்திற்கு திரும்பியுள்ளது!

Thursday, November 17, 2011
சுமார் 25 வருட இடைவெளியின் பின்னர் பருத்தித்துறை நீதிமன்று தனது சொந்த இடத்திற்கு திரும்பியுள்ளது. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவூப் கக்கீம் ஆகியோர் நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்தனர்.கடந்த கால இராணுவ நடவடிக்கைகளையடுத்து பருத்தித்துறை துறைமுகத்தையண்டிய பகுதி படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதுடன் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுமிருந்தது.

இதையடுத்து கடந்த 16 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை நீதிமன்று இடம்பெயர்ந்த நிலையில் நெல்லியடிப்பகதியினில் தனியார் கட்டிடமொன்றினில் செயற்பட்டு வந்திருந்தது. தற்போது படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டதுடன் திருத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.அக்கட்டிட தொகுதியே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவூப் கக்கீம் ஆகியோரே நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்தனர்.

எனினும் திருத்த வேலைகள் பூரணப்படுத்தாத நிலையில் அடுத்து வரும் ஜனவரியே நீதிமன்ற பணிகள் இங்கு ஆரம்பிக்குமென தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment