Saturday, November 26, 2011

பாகிஸ்தான் கப்பல் இலங்கையில்

Saturday, November 26, 2011
பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று நல்லெண்ண அடிப்படையிலான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது.

இன்றைய தினம் இலங்கை வரும் இந்த கப்பல், 29ம் திகதி வரையில் இங்கு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவினை நெருக்கப்படுத்திக் கொள்ள இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செய்ப் எனப்படும் இந்தகப்பல், கடந்த வருடம் சீனாவில் கட்டப்பட்டு, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment